சிறை தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரர் மற்றும் பௌத்த தேரர்களின் மத உரிமைகளுக்காக மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நடை பேரணி இன்று (14) ஐந்தாவது நாளாகவும் தொடர்கின்றது.
இன்று (14) நிட்டம்புவ நகரத்தில் ஆரம்பமாகும் இந்த நடைபயணம் கடவத்தை நகரம் வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக உலபனே சுமலங்க தேரர் தெரிவித்துள்ளார்.
‘காவிக்கு நீதி சுதந்திரத்தின் பாதயாத்திரை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பேரணி கடந்த 10ஆம் திகதி கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.
இந்தச் சுதந்திரத்தின் பாதயாத்திரை நிட்டம்புவ மற்றும் கடவத்தை ஆகிய நகரங்களைக் கடந்து, எதிர்வரும் 15ஆம் திகதியளவில் கொழும்பை வந்தடைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.