Wednesday, 21 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!!

சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியோக செயலாளரான சுகீஸ்வர பண்டார எதிர்வரும் 28ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சுகீஸ்வர பண்டாரவின் வழக்கினை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான தேவை எதுவும் இல்லை என நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளதாக இன்று (21) கோட்டை நீதவான் பசன் அமரசேன குறித்த கட்டளையை வாசித்துக் காட்டியபோது தெரிவித்தார்.

அவரது மனைவியின் கணக்கு மற்றும் ஏனைய கணக்குகள் தொடர்பில் அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு உரிய வங்கிப் பிரதானிகளுக்கு உத்தரவிட்ட நீதவான், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

இதற்கமைய சுகீஸ்வர பண்டார ஒக்டோபர் 28ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பகிர்க: Facebook Twitter