Wednesday, 21 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

100 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கண்காணிப்பு அதிகாரி கைது!

100 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கண்காணிப்பு அதிகாரி கைது!

100 ரூபாய் இலஞ்சப் பணத்தைக் கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் கம்பஹா பிராந்திய அலுவலகத்தைச் சேர்ந்த நேரக் கண்காணிப்பு அதிகாரி (Time Keeper) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (20) நண்பகல் 12.25 மணியளவில் ரத்தோலுகம பேருந்து நிலையத்தில் உள்ள நேரக் கண்காணிப்பாளரின் அறையில் வைத்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

188 எண்ணுடைய வீதி வழியில் ரத்தோலுகமவிலிருந்து கொழும்பு வரை பயணிக்கும் பேருந்து ஒன்றின் பயண நேரத்தை குறித்த நேரத்தில் தொடங்காமல் தாமதித்துத் தொடங்குவதற்குச் சந்தர்ப்பம் அளிப்பதற்கும், சாதகமான முறையில் பயண நேரத்தைத் தொடங்குவதற்கு அனுமதிப்பதற்கும் சந்தேகநபர் குறித்த பேருந்தின் ஊழியர் ஒருவரிடமிருந்து 100 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கைதான நபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பகிர்க: Facebook Twitter