கோதுமை மாவின் விலையை உயர்த்துவதற்கு உரிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாத இறுதியிலும் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சந்தை நிலவரம் மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டு உடன் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலையை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.