திருகோணமலை, 4ஆம் கட்டை சந்தியில் உள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், குழுவொன்றினால் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை, சிங்கபுர பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (20) இரவு இடம்பெற்றுள்ளது.
கொல்லப்பட்ட நபர் விடுதியில் தனியாக இருந்தவேளையில், அடையாளம் தெரியாத நபரோ அல்லது குழுவினரோ இந்த படுகொலையைச் செய்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.