சிறையில் உள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் எனவும் அல்லது நாட்டுக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படுபவர்களை அகற்றி, நாட்டில் நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டும் நோக்கில் விசேட சடங்கொன்று நேற்று (20) கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்றது.
சமந்தபத்ர தேரரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாத்தறையிலிருந்து அழைக்கப்பட்ட மந்திரவாதிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, “மஹசோன் பிதேனிய” எனப்படும் சடங்கு நடத்தப்பட்டது.
மேலும் அநீதியானவர்களைக் குறிவைத்து சடங்குகள் மேற்கொண்டு, நாட்டை அராஜக நிலையிலிருந்து மீட்பதற்காக இயற்கையின் சக்தியிடம் நாட்டை ஒப்படைக்கும் வழிபாட்டு நிகழ்வாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் பிக்குமார்களும் அவர்களுடன் ஆதரவான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் பலங்கொட கஸ்ஸப தேரர், ஜனாதிபதி நேரில் வந்து ‘மன்னிக்கவும், தவறு நடந்துவிட்டது’ என்று கூறினால் மாத்திரமே பிரித் ஓதி நூல் கட்டி ஆசி வழங்குவோம்..!” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
