Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

அனோஜனின் மரண தண்டனை விவகாரம்- தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கையின் சட்டத்தரணிகள் குழு!

அனோஜனின் மரண தண்டனை விவகாரம்- தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கையின் சட்டத்தரணிகள் குழு!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கையின் சட்டத்தரணிகள் குழுவொன்று பங்கேற்றுள்ளது.

இதற்கமைய ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா மற்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி ஆகியோர் இதில் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஜெத்தாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் நாயகம் நீதிபதி எம்.டீ. மொஹமட், சட்டத்தரணி ஃபாரிஸ் ஃபஸால் அப்துல் ஹஃபீல் மொஹமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவின் இணைப்புச் செயலாளர் மொஹமட் ரியாஸ்தீன் சில்மி ஆகியோரும் இந்தத் தூதுக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

பகிர்க: Facebook Twitter