Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
உலக செய்திகள்

தி.மு.க.வுடன் நீடித்து வந்த 20 ஆண்டுகால உறவை முறித்தது காங்கிரஸ் கட்சி!

தி.மு.க.வுடன் நீடித்து வந்த 20 ஆண்டுகால உறவை முறித்தது காங்கிரஸ் கட்சி!

தி.மு.க.வுடன் நீடித்து வந்த 20 ஆண்டுகால உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி அக்கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.

தமிழக அரசியலில் இது பெரும் திருப்பமாக அமைந்துள்ளது.

அத்துடன் தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான ஆதரவை தமிழக வெற்றிக் கழகத்திற்கு (த.வெ.க.) வழங்கப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கடிதம் ஒன்றை வௌியிட்டுள்ளது,

இம்முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 5 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் த.வெ.க.வை ஆதரிப்பதாக அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

மதவாத சக்திகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் கூட்டணியில் அனுமதிக்கக் கூடாது என்ற முக்கிய நிபந்தனையுடன் இந்த ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கூட்டணியானது எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களிலும் தொடரும் என காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக காங்கிரஸ் இத்தகைய முடிவை எடுக்கக்கூடும் எனத் தகவல்கள் வெளியான போதே, தி.மு.க. தரப்பிலிருந்து இதற்குக் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த அதிரடி அரசியல் நகர்வினால் தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதற்கான சூழல் உறுதியாகியுள்ளதுடன், திராவிடக் கட்சிகளின் நீண்டகாலக் கூட்டணி அரசியலில் ஒரு பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter