கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று (25) ஆரம்பமாகிறது.
இலங்கை புத்தக பதிப்பாளர்கள் சங்கத்தால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் இந்த புத்தகக் கண்காட்சி கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகின்றது.
10 நாட்கள் இடம்பெறும் இந்த கண்காட்சி, ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் புத்தகக் கண்காட்சிக்கு வரும் வாசகர்கள், கண்காட்சி வளாகத்திற்குள் பொலித்தீனைக் கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹெவாவசம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.