Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
உலக செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது!

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில், காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் தவெக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தவெக அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, உதயநிதியின் பேச்சு விவகாரத்தில் அவரை கைது செய்ய, நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டின் முன்பு இன்று காலையில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டனர். திமுக நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினரிடம் பொலிஸார் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அத்துடன், சாலை மறியல் போராட்டத்திலும், கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பதற்றத்தினை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன் பெருமளவு ஆதரவாளர்கள் குவிந்துள்ளதுடன், பெரும் பரபரப்பு நிலவுகின்றது.

இந்த நிலையில் உதயநிதியின் நீலாங்கரை வீட்டை சுற்றி காலை முதல் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், திமுகவினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட பின்னர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் விவசாயிகளை ஏமாற்றி வரும் தவெக அரசையும், முதல்வர் விஜய்யையும் கண்டித்து 22 நிமிடங்கள் பேசினேன். அரசு எப்படியெல்லாம் விவசாயிகளை ஏமாற்றுகிறது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, மேகதாதுவை எதிர்த்து குரல் கொடுக்க திராணியற்ற, தெம்பில்லாத, பயந்தாங்கொள்ளி அரசாக இருக்கிறது என்றுதான் ஆர்ப்பாட்டத்தில் பேசினேன்.

அதையெல்லாம் மறைக்க இப்போது இந்த பிரச்சினையை உருவாக்கியுள்ளனர். பிரச்சினைகளை திசை திருப்பும் வகையில், ரீல்ஸ் வெறி முற்றிப்போய் முதல்வரும், அமைச்சர்களும் வாழ்வதாக நேற்று பேசினேன். ஆனால், நான் பேசாத ஒன்றை பேசியதாக பொய்ப் பிரச்சாரம் செய்து, பொய் வழக்கு பதிவு செய்து என்னை கைது செய்துள்ளனர். இதற்கெல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை. இதனை சட்டப்படி நான் சந்திப்பேன்- என்று தெரிவித்துள்ளார்.

கைதான உதயநிதி ஸ்டாலின் அவர்களை பொலிஸார் தஞ்சை அழைத்துச் செல்கின்றனர்.

பகிர்க: Facebook Twitter