Tuesday, 28 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த மாணிக்கக்கல் அகழ்வு மோசடி முற்றுகை!!

சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த மாணிக்கக்கல் அகழ்வு மோசடி முற்றுகை!!

ஹொரணை, கொபவகவத்தை களுகங்கை மோதரப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய அளவிலான மாணிக்கக்கல் அகழ்வு மோசடி ஒன்றை வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது, 3 மாணிக்கக்கல் வியாபாரிகள் உட்பட 25 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த முற்றுகையின் போது, 11 படகுகள், 5 மோட்டார்கள் உட்பட மாணிக்கக்கல் அகழ்விற்குப் பயன்படுத்தப்பட்ட 7 கோடி ரூபா பெறுமதியான உபகரணங்கள் வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

பகிர்க: Facebook Twitter