மாத்தறை – தலல்ல வீதியின் வஜிர வம்ச மாவத்தை பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
காலியிலிருந்து அம்பாறை நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றும், தங்காலையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றும் நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது சுமார் 40 பேர் காயமடைந்த நிலையில் மாத்தறை மற்றும் பதிகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.