Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

‘ஏஹி பஸ்ஸிகோ’ அமைதிக்கான நடைபயணம்- கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!

‘ஏஹி பஸ்ஸிகோ’ அமைதிக்கான நடைபயணம்- கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!

‘ஏஹி பஸ்ஸிகோ’ (Ehi Passiko) சர்வதேச அமைதிக்கான நடைபயணம் கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள நிலையில், விசேட போக்குவரத்துத் திட்டம் குறித்து பொலிஸார் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இன்று நண்பகல் 12.00 மணிக்கு களனி ரஜமஹா விகாரையில் ஆரம்பமாகும் இந்த அமைதிக்கான நடைபயணம், சுதந்திர சதுக்கத்தை நோக்கி பயணிக்கவுள்ளது.

பின்னர் இன்று (28) மாலை 04.00 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் விசேட அரச விழா நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு கொழும்பு போக்குவரத்துப் பிரிவினரால் குறித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி இன்று காலை 11.00 மணி முதல் பின்வரும் வீதிகளில் நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவ்வப்போது போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.

பண்டாரநாயக்க சுற்றுவட்டம் முதல் பேஸ்லைன் வீதி ஊடாக பொரளை சந்தி வரை, மருதானை வீதி, நந்ததாச கோதாகொட மாவத்தை, வோர்ட் பிளேஸ், சொய்சா சுற்றுவட்டம், லிப்டன் சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, எஃப். ஆர். சேனாநாயக்க மாவத்தை, சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மாவத்தை, ஹோர்டன் சுற்றுவட்டம், நந்தா மோட்டார்ஸ், சுதந்திர மாவத்தை, பிரேமசிறி கேமதாச மாவத்தை, கேம்பிரிட்ஜ் பிளேஸ், கிளாஸ் ஹவுஸ் சந்தி, மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தை, நூலக சந்தி, மலர் வீதி, பித்தளை சந்தி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, முத்தையா வீதி, பேபுரூக் வீதி, ஸ்டேபில் வீதி மற்றும் கங்காராம விகாரையைச் சூழவுள்ள வீதிகள்.

இக்காலப்பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சாரதிகள் மற்றும் பொதுமக்கள் தங்களால் இயன்றவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பகிர்க: Facebook Twitter