Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு!

டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு!

அமெரிக்க டொலரின் விற்பனை விலை இலங்கை ரூபாயின் அடிப்படையில் 330 ரூபாயைத் தாண்டியுள்ளது.

இன்றையதினம் (27) இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட தினசரி நாணய மாற்று வீத அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 320.40 ரூபாயாகவும், விற்பனை விலை 330.81 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் நேற்று (26) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 318.32 ரூபாயாகவும், விற்பனை விலை 328.69 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter