Wednesday, 21 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

யாழ். அரியாலை பகுதியில் பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் மீட்பு!

யாழ். அரியாலை பகுதியில் பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் மீட்பு!

யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் உள்ள காணி ஒன்றில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் இருந்து பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் நேற்று (20) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த காணியில் அமைந்துள்ள கிணறு ஒன்றைச் சுத்தம் செய்து நீர் இறைத்த போதே, கிணற்றுக்குள் இருந்த சாக்குமூட்டைகளில் இருந்து துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் யாழ்ப்பாணத் தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆரம்பக் கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அத்துடன் இன்றையதினம் (21) நீதிமன்ற அனுமதியைப் பெற்று, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரின் உதவியுடன் அவற்றை முழுமையாக மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பகிர்க: Facebook Twitter