புத்தளம் மாவட்டம் தங்கொட்டுவ, கோனவில பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 65 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.