Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு!!

பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு!!

சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் நிதியை தவறாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (14) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவுக்கு உத்தரவிட்டார்.

சர்வதேச பொலிஸார் மூலம் சிவப்பு அறிவித்தலை பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த கருத்துக்களை அடுத்தே, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கு 2014ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 7.8 மில்லியன் ரூபாய் நிதியை, அப்பணியகத்தின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தாமல், ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக 12,000 டி-ஷர்ட்டுகளைப் பெற்றுக்கொடுத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாகவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

பகிர்க: Facebook Twitter