Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

உயர்நீதிமன்ற உத்தரவொன்றை அமுல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா’ (Transparency International Sri Lanka) அமைப்பு உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

மருந்துகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்ற முறைகேடு காரணமாக அடிப்படை மனித உரிமைகளை மீறியமைக்காக, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல 75 மில்லியன் ரூபாயையும், சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் எஸ்.டீ. ஜெயரத்ன மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர ஆகியோர் தலா 50 மில்லியன் ரூபாயையும் அரசாங்கத்திற்கு இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

பிரதிவாதிகள் இத்தீர்ப்பிற்கு அமைவாகச் செயற்படாமையின் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தத் தவறிய தொடர்புடைய பிரதிவாதிகளுக்கு எதிராக, 2024ஆம் ஆண்டின் 08ஆம் இலக்க நீதிமன்ற நிறுவனங்களை அவமதித்தல் பற்றிய சட்டம் மற்றும் அரசியலமைப்பின் 105(3) பிரிவின் கீழ் பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்த மனுவின் மூலம் உயர்நீதிமன்றிடம் மேலும் கோரப்பட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter