Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

மூன்றாவது நாளாகவும் தொடரும் பிக்குகளின் நடைபயணம்!

மூன்றாவது நாளாகவும் தொடரும் பிக்குகளின் நடைபயணம்!

சிறைச்சாலையில் தண்டனை பெற்றுவரும் பௌத்த கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் பிக்குகளின் மத உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் இன்று (12) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

கடந்த 10ஆம் திகதி கண்டி ஸ்ரீ தலாதா மாளிகைக்கு முன்பாக ஆரம்பமான இந்த நடைபயணம், முதல் நாளில் கடுகன்னாவயையும் இரண்டாவது நாளில் கேகாலையையும் அடைந்தது.

இந்த நடைபயணம் கேகாலை, வரக்காபொல, நிட்டம்புவ, கடவத்தை ஆகிய நகரங்களைக் கடந்து, எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பைச் சென்றடையவுள்ளது.

அதன்படி இன்றைய தினம் கேகாலை நகரத்தில் ஆரம்பமாகும் இந்த பாதயாத்திரை, வரக்காபொல நகரைச் சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter