Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

போலி வைத்தியர்கள் இருவர் மருந்துகளுடன் கைது!

போலி வைத்தியர்கள் இருவர் மருந்துகளுடன் கைது!

போலி வைத்தியர்கள் இருவர் மருந்துகளுடன் வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீகலாவ பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 62 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மீகலாவ பொலிஸ் பிரிவில் வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குருநாகல் பிராந்திய சுகாதார பணிப்பாளரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது கைதான நபர்களிடம் இருந்து சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மருந்துத் தொகுதியும் கைப்பற்றப்பட்டது.

கைதான நபர்கள் மீகலாவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குருநாகல் மாவட்ட மருந்தாய்வாளர்கள், சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் மீகலாவ பொலிஸார் இணைந்து முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter