Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டி- ஆடவர் கிரிக்கெட்டில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்!

ஆசிய விளையாட்டுப் போட்டி- ஆடவர் கிரிக்கெட்டில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட்டில் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில், பங்களாதேஷ் அணியை 63 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, 21 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் தரிந்து ரத்நாயக்க 32 பந்துகளில் 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 65 ஓட்டங்கள் விளாச, அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளுக்கு 165 ஓட்டங்களைப் பெற்றது.

அணித்தலைவர் சஹான் ஆரச்சிகே 33 ஓட்டங்கள் எடுத்தார். பங்களாதேஷ் தரப்பில் மெஹதி ஹசன், சைஃப் ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

166 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ், முதல் மூன்று வீரர்களும் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க, 4 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

அணிசார்பில் அதிகபடியாக நசும் அஹமட் 26 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

இந்த நிலையில் பங்களாதேஷ் அணி 17.3 ஓவர்களில் 102 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இலங்கை சார்பில் நுவன் துஷார, தரிந்து ரத்நாயக்க, விஜயகாந் வியாஸ்காந்த், வனுஜ சஹன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பகிர்க: Facebook Twitter