Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

தனியார் பேருந்து, அரச பேருந்து மோதி விபத்து!!

தனியார் பேருந்து, அரச பேருந்து மோதி விபத்து!!

திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தும் ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த இரு பேருந்துகளும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட வேளையில் களுதாவளை கடற்கரை வீதி சந்தி அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து, அருகிலிருந்த கோழி விற்பனை செய்யும் கடை ஒன்றில் மோதியதில் அக்கடைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter