Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

கிளிநொச்சி பகுதியில் விபத்து- ஆணின் கை துண்டிக்கப்பட்டு பயங்கரம்!

கிளிநொச்சி பகுதியில் விபத்து- ஆணின் கை துண்டிக்கப்பட்டு பயங்கரம்!

கிளிநொச்சி ஏ9 வீதியின் இரணைமடு சிவன் கோயில் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவரின் கை துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுன்கிறது.

குறித்த விபத்து சம்பவம் இன்று காலை சுமார் 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கனகாம்பிகைக்குளம் பகுதியில் இருந்து ஏ9 வீதிக்கு செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் மீது, இரணைமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி வந்த டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரின் ஒரு கை துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து படுகாயமடைந்த அவர் உடனடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter