Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

யாழ். வல்லை வெளி வீதியில் விபத்து- பூசகர் ஒருவர் உயிரிழப்பு!

யாழ். வல்லை வெளி வீதியில் விபத்து- பூசகர் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் வல்லை வெளி வீதியில் இடம்பெற்ற விபத்தில் பூசகர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கெருடாவில் பகுதியைச் சேர்ந்த பூசகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் இன்று (28) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பூசகர், வல்லை முனியப்பர் ஆலயத்தில் வழிபாடுகளை முடித்துவிட்டு வீதியை நோக்கி வந்த இளைஞருடன் மோதி வீதியில் விழுந்துள்ளார்.

இதன்போது அவருக்கு பின்னால் வந்த வாகனம் ஒன்று பூசகர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்த பூசகரின் சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter