யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபனின் சிலையை பொலிஸார் பெயர்த்து எடுத்து சென்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிலையை மீள அவ்விடத்தில் நிறுவ வேண்டும் என வலியுறுத்தியும் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் நேற்றையதினம் (27) மாலை முன்னெடுக்கப்பட்டது.
தியாக தீபத்தின் நினைவாலயம் பகுதியில், தியாக தீபத்தின் 39ஆம் நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நாள் நிகழ்வான கடந்த 15ஆம் திகதி சிலை வைக்கப்பட்டு, தொடர்ந்து 12 நாட்கள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று, நேற்றைய தினம் சனிக்கிழமை இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிலையில் நேற்றைய தினம் நினைவிவாலயத்திற்கு யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான சுமார் 20க்கும் மேற்பட்ட பொலிஸார், இரண்டு பொலிஸ் வாகனங்களில் வந்து சிலையை அங்கிருந்து பெயர்த்து எடுத்து சென்றுள்ளனர்.
பொலிஸாரினால் சிலை பெயர்த்து எடுத்து செல்லப்பட்டதனை கண்டித்தும், மீள அந்த சிலையை அவ்விடத்தில் நிறுவ வேண்டும் என கோரியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

