பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த சிறுநீரக வைத்தியசாலை ஊழியர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக வைத்தியசாலை கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.