மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்குளம் பகுதியில், தம்பதியினர் கூர்மையான ஆயுதத்தால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் 68 வயதுடைய பெண் ஒருவரும் 70 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பனிச்சங்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த தம்பதியினர், நேற்று (24) அதிகாலை கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்த நிலையில் மங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கொலை சம்பவத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.