Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

வவுனியா ஆசிரியை மின்னேரியா பகுதியில் சடலமாக மீட்பு!

வவுனியா ஆசிரியை மின்னேரியா பகுதியில் சடலமாக மீட்பு!

வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியையும், கலை மற்றும் இலக்கியத் துறைகளில் ஆர்வத்துடன் செயற்பட்டு வந்தவருமான வனிதா சேனாதிராஜா என்பவர் நேற்று (23) புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மின்னேரியா பகுதியில் உள்ள தங்குமிடமொன்றில் இருந்து அவரது சடலம் காணப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், வனிதா சேனாதிராஜா தனது உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என மின்னேரியா பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் இது தொடர்பில் இறுதியான முடிவு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய அவரது சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதன் மருத்துவ அறிக்கை மற்றும் தடயவியல் சான்றுகளின் அடிப்படையில் காவல்துறையினர் அடுத்தகட்ட விசாரணைகளை நகர்த்தி வருகின்றனர்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள், விசாரணைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயிரிழந்த ஆசிரியை கலை இலக்கிய வட்டாரங்களில் தீவிரமாக இயங்கிவந்ததுடன் ஈழத் தமிழர்களின் உரிமைகள் மற்றும் அரசியல் சார்ந்த கலந்துரையாடல்களிலும், குறிப்பாக திருகோணலை பிரகடனம் உள்ளிட்ட சமூக மாநாடுகளிலும் ஒரு முக்கிய பேச்சாளராகவும் செயல்பாட்டாளராகவும் இருந்தவர் என கூறப்படுகின்றது.

ஆசிரியரின் உயிரிழப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது மறைவுக்கு சமூக ஆர்வர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பகிர்க: Facebook Twitter