Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

அரச பேருந்தும், தனியார் பேருந்தும் மோதி விபத்து- 06 பேர் வைத்தியசாலையில்!!

அரச பேருந்தும், தனியார் பேருந்தும் மோதி விபத்து- 06 பேர் வைத்தியசாலையில்!!

புத்தள – மொனராகலை பிரதான வீதியின் மஹகொடையாய பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான (CTB) பேருந்தும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் இன்று (24) காலை இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது ஆறு பேர் காயமடைந்த நிலையில் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெல்லவாயவிலிருந்து மொனராகலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து, பயணிகளை இறக்குவதற்காக மஹகொடையாய பகுதியில் நிறுத்தப்பட்டபோது, மாத்தறையிலிருந்து அம்பாறை நோக்கிப் பின்னாலிருந்து வந்த தனியார் பேருந்து, இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தின் பின்பகுதியில் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புத்தள பொலிஸ் நிலைய அதிகாரிகள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter