Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

வெளிநாட்டு இலத்திரனியல் சிகரெட்டு தொகுதியுடன் 26 வயது இளைஞன் கைது!!

வெளிநாட்டு இலத்திரனியல் சிகரெட்டு தொகுதியுடன் 26 வயது இளைஞன் கைது!!

சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய முற்பட்ட வெளிநாட்டு இலத்திரனியல் சிகரெட்டுகள் தொகுதியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான ஸ்ரீ லங்கா கடற்படை கப்பலான ரங்கலவின் அதிகாரிகளும் மிரிஹான மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து கடந்த (01) ஆம் திகதி வெல்லம்பிட்டியில் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இச்சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது சட்டவிரோத இலத்திரனியல் சிகரெட்டுகள் 130 மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காருடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், கார் மற்றும் சட்டவிரோத சிகரெட் தொகுதி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பகிர்க: Facebook Twitter