Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக இலங்கை விமானப் படையின் ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய ஆணையாளர் நாயகம் இன்று (01) முற்பகல் கொழும்பு 05, எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் தனது உத்தியோகபூர்வ கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

கொழும்பு, ஹுனுபிட்டிய கங்காராம விகாராதிபதி அதிவணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி நாய்மி தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரின் சமய வழிபாடுகளுக்கு மத்தியில் புதிய ஆணையாளர் நாயகம் தனது கடமைகளை ஆரம்பித்தார்.

பகிர்க: Facebook Twitter