Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான்!!

மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான்!!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களை, ஓகஸ்ட் 18ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. தர்ஷினி முன்னிலையில் இன்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர் காணொளி வழியே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதில் அவர் 3ஆம் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதுடன், கல்லடிப் பகுதியில் இடம்பெற்ற ஐந்து கொலைகள் மற்றும் காணிப் பிரச்சினை தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளன.

பகிர்க: Facebook Twitter