Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலைக்கு மத்தியில் உயர் தரப் பரீட்சை தொடர்பாக சிறப்பு கலந்துரையாடல்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலைக்கு மத்தியில் உயர் தரப் பரீட்சை தொடர்பாக சிறப்பு கலந்துரையாடல்!

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலைக்கு மத்தியில், எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை என்பன தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு இடையே நாளை (05) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

நிலவும் மழைக்கால வானிலையுடன் பரீட்சைப் பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

உயர்தரப் பரீட்சையுடன் அப்பகுதியில் ஏற்படும் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பரீட்சைத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து 5ஆம் திகதி சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.

அங்கு இதற்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது குறித்து நாங்கள் தயாராகி வருகிறோம். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஓகஸ்ட் மாதம் மழை குறைவான காலமாகும். எனினும் பருவக்காற்று தீவிரமடைந்துள்ளமையால் இது ஒரு தற்காலிக நிகழ்வாகும்.

அத்துடன் 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளுக்குப் பிறகு மழை சற்று குறையும். எப்படியும் பரீட்சை 10ஆம் திகதிக்குப் பிறகே உள்ளது என்பதால், அந்த நேரத்திற்குள் இந்தத் தாக்கம் பெருமளவில் குறைந்துவிடும்- என தெரிவித்திருந்தார்.

பகிர்க: Facebook Twitter