Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

நிலவும் சீரற்ற வானிலை- மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அனுமதி!

நிலவும் சீரற்ற வானிலை- மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அனுமதி!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணத்தின் 6 கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் நயோமி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதன்படி ஹட்டன், கொத்மலை, நுவரெலியா, கம்பளை, கண்டி மற்றும் தெல்தெனிய ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

​அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

​இது தொடர்பில் அனைத்து வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் நயோமி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter