Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட மூவருக்குக் கடூழிய சிறைத்தண்டனை!!

முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட மூவருக்குக் கடூழிய சிறைத்தண்டனை!!

2008ஆம் ஆண்டு தெஹிவளைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தகராறு ஒன்றைத் தொடர்ந்து பணத்தைக் கொள்ளையடித்தமை தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும், சிவிலியன் ஒருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு தெஹிவளைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தகராறு முற்றியதைத் தொடர்ந்து பணத்தைக் கொள்ளையடித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், சட்டமா அதிபரினால் இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

குறித்த குற்றச்சாட்டுகளுக்குக் குற்றவாளியாகக் காணப்பட்ட சிவிலியனுக்கு 5 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பகிர்க: Facebook Twitter