Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரி கைது!

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரி கைது!

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைப் பரப்பினார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் அலுவலகத்தில் இணைக்கப்பட்டுப் பணியாற்றிய அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த அதிகாரி இன்று (31) கைது செய்யப்பட்டார்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பிரச்சாரங்கள் தொடர்பாகப் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அது குறித்த விசாரணைகள் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான நபர் இன்று (31) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter