Wednesday, 29 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை- கம்பளை பகுதியில் சம்பவம்!

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை- கம்பளை பகுதியில் சம்பவம்!

கம்பளை, கீரப்பனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கீரப்பனை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளது.

நேற்று (28) இரவு இடம்பெற்ற இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.

காயமடைந்த நபர் உடனடியாக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

உயிரிழந்த நபருக்கும் அவரது சகோதரியின் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில், சகோதரியின் மகன் மன்னாக் கத்தியால் தாக்கி இக்கொலையைச் செய்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 43 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter