Wednesday, 29 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

வவுனியாவில் விபத்து- ஒருவர் உயிரிழப்பு!

வவுனியாவில் விபத்து- ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா, தாண்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கனகராஜன்குளத்தைச் சேர்ந்த 64 வயதுடைய சிவராசா உதயகுமாரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கனகராஜன்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், அதே திசையில் பின்னால் வந்த கப் ரக வாகனம், மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிவிட்டு நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற கப் ரக வாகனத்தையும் அதன் சாரதியையும் அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter