உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக்கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவை மேலதிக பரிசீலனைக்காக ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்றையதினம் (28) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது மேலதிக சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக இம்மனுவை ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அழைக்குமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.
அன்றைய தினம் மனு தொடர்பான மேலதிக சமர்ப்பணங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.