Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

தனியார் பேருந்து ஒன்று தலகல ஓயாவிற்குள் கவிழ்ந்து வீழ்ந்து விபத்து!

தனியார் பேருந்து ஒன்று தலகல ஓயாவிற்குள் கவிழ்ந்து வீழ்ந்து விபத்து!

நுவரெலியா பேருந்து நிலையத்திற்கு அருகில், நுவரெலியா கிரெகரி ஏரியை ஒட்டியுள்ள தலகல ஓயாவிற்குள் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்று (08) இடம்பெற்றுள்ளது.

நுவரெலியாவிலிருந்து நுவரெலியா சாந்திபுர நோக்கி பயணிக்கும் இந்தத் தனியார் பேருந்தை நிறுத்துவதற்கு முற்பட்ட போது, அது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தலகல ஓயாவிற்குள் கவிழ்ந்து இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்து நடந்த தருணத்தில் பேருந்திற்குள் சாரதியும் நடத்துநரும் மாத்திரமே இருந்துள்ளதுடன், அவர்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என நுவரெலியா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பகிர்க: Facebook Twitter