Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

மட்டக்குளி பகுதியில் ஹெரோயினுடன் நபரொருவர் கைது!

மட்டக்குளி பகுதியில் ஹெரோயினுடன் நபரொருவர் கைது!

மட்டக்குளி ஃபெர்குசன் வீதியில் அதிக எடையுள்ள ஹெரோயினுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது நேற்று (01) பிற்பகல் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கொழும்பு – 10 பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபரிடமிருந்து 5 கிலோகிராம் 140 கிராம் ஹெரோயின், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 50,000 ரூபாய் பணம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு கைபேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம்தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter