Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

2026 ஃபீஃபா உலகக் கிண்ணம்- போர்த்துக்கல் அபார வெற்றி!

2026 ஃபீஃபா உலகக் கிண்ணம்- போர்த்துக்கல் அபார வெற்றி!

2026 ஃபீஃபா உலகக் கிண்ணத்தின் குரூப் ‘K’ பிரிவில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில் போர்த்துக்கல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

போட்டியின் 6-வது நிமிடத்திலேயே போர்த்துக்கல் அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோல் அடித்ததுடன், தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர், 39வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார்.

இந்த கோல்களின் மூலம், உலகக் கிண்ண வரலாற்றில் ஆறு வெவ்வேறு உலகக் கோப்பை தொடர்களில் (2006, 2010, 2014, 2018, 2022, 2026) கோல் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். மேலும், உலகக் கோப்பையில் போர்த்துக்கல் அணிக்காக அதிக கோல் அடித்த யூசிபியோவின் (Eusébio – 9 கோல்கள்) சாதனையை முறியடித்து, தனது 10-வது உலகக் கிண்ண கோலுடன் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

நேற்றைய போட்டியில் முழுமையான ஆதிக்கத்தை செலுத்திய போர்த்துக்கல் அணி 66% பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இந்த வெற்றியின் மூலம் குரூப் ‘K’ பிரிவில் 4 புள்ளிகளுடன் போர்த்துக்கல் அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

கொலம்பியா அணி 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், உஸ்பெகிஸ்தான் அணி புள்ளிகள் ஏதுமின்றி கடைசி இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter