2027ஆம் ஆண்டு முதல் அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக, புதிய விதிகள் மற்றும் அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக சுற்றறிக்கை அறிவுறுத்தல்கள் வெளியிடப்படுவது வழக்கமாகும்.
கல்வியைப் பெறுவதற்கான சமமான மற்றும் நியாயமான வாய்ப்புகளை உறுதி செய்தல், இந்தச் செயல்முறையின் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் மற்றும் முறைகேடுகளைக் குறைத்தல் ஆகியவையே இந்த புதிய நடவடிக்கையின் நோக்கம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அதிபர்கள் மற்றும் கல்விப் அதிகாரிகளின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள், அத்துடன் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு இந்த புதிய சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான புதிய அறிவுறுத்தல் கோவையை வெளியிடுவதற்காக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.