Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

யாழ். பல்கலையில் உடைத்துச் சேதமாக்கப்பட்ட வெசாக் கூடுகள்- பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ். பல்கலையில் உடைத்துச் சேதமாக்கப்பட்ட வெசாக் கூடுகள்- பொலிஸார் தீவிர விசாரணை!

வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள், இனந்தெரியாத நபர்களினால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயிலும் மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தினுள் வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாதோாரால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற கோப்பாய் பொலிஸார் தடயங்களைச் சேகரித்துள்ளதுடன், வெசாக் கூடுகளைச் சேதப்படுத்திய நபர்களைக் கண்டறிவதற்காகத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பகிர்க: Facebook Twitter