Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழைக்கால நிலைமை தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீட்டர் அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

இதேவேளை ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும். காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீட்டர் ஆக காணப்படும். காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையான மற்றும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு (50-60) கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

நாட்டை சுற்றியுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

கங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையான மற்றும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்கள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பிராந்தியங்கள் அவ்வப்போது ஓரளவுக் கொந்தளிப்பாகக் காணப்படும்.

கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் அலைகளின் உயரம் சுமார் (2.0 – 2.5) மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் (இது தரைப்பகுதிக்கானது அல்ல).

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதனை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பகிர்க: Facebook Twitter