Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

வெசாக் வாரத்தில் மூடப்பட வேண்டிய இடங்கள்!

வெசாக் வாரத்தில் மூடப்பட வேண்டிய இடங்கள்!

அரச வெசாக் விழாவை முன்னிட்டு இறைச்சி விற்பனை நிலையங்கள், இறைச்சிக்காக விலங்குகளைக் கொல்லும் இடங்கள், பந்தய நிலையங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று (27) முதல் ஜூன் மாதம் 02ஆம் திகதி வரை வெசாக் வாரம் முழுவதும் குறித்த இடங்களை மூடுமாறு அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை மே மாதம் 30, 31 மற்றும் ஜூன் மாதம் 01 ஆகிய திகதிகளில் நாடு முழுவதும் இறைச்சிக்காக விலங்குகளைக் கொல்லும் இடங்கள் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்களை மூடுவதற்கும், பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி விற்பனையை நிறுத்துவதற்கும், பந்தய நிலையங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளை மூடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter