நாவலப்பிட்டி கெட்டபுலாவிலிருந்து, நாவலப்பிட்டி ஹரங்கல நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 13 பாடசாலை மாணவர்கள் காயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் நாவலப்பிட்டி திஸ்பனே சந்தி பகுதியில் இன்று (05) காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வேனின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், நாவலப்பிட்டி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.