Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து விபத்து!

பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து விபத்து!

பொகவந்தலாவ – பலாங்கொடை பிரதான வீதியின் கொட்டியகலை பகுதியில் இன்று (28) காலை 7.40 மணியளவில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

பொகவந்தலாவ, கெம்பியன் பகுதியிலிருந்து பொகவந்தலாவ நகரை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

கெம்பியன் பகுதியிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த இப்பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது பேருந்தில் பயணித்த சுமார் 34 மாணவர்கள் காயமடைந்து பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சில மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter