Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
உலக செய்திகள்

ஈரான் மீதான போர் தொடர்பாக பிரிக்ஸ் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளிடையே கருத்து வேறுபாடு!

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தோனேசியா ஆகிய 11 உறுப்பு நாடுகளை கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் துணை வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் விசேட தூதுவர்களின் சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது.

டெல்லியில் நடந்த இந்த கூட்டத்தில் பிராந்தியத்தில் நடைபெறும் மோதல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதில் ஈரான் மீதான போர் தொடர்பாக நடந்த விவாதத்தில் உறுப்பு நாடுகளிடம் கருத்து வேறுபாடு நிலவியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் ஏகமனதாக ஒரு தீர்மானம் எட்டப்படாமல் இந்தக் கூட்டம் முடிவடைந்துள்ளது.

குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் நிலைப்பாடு காரணமாக கூட்டறிக்கை வெளியிடப்படாமல் போனதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிர்க: Facebook Twitter