Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
உலக செய்திகள்

ஜப்பானின் வடக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானின் வடக்கு பகுதியில் இன்று (27) அதிகாலை 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

எனினும் இதனால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

ஜப்பான் வானிலை ஆய்வு மையம் இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதனையும் விடுக்கவில்லை.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி, ஜப்பானின் வடக்கு தீவான ஹோக்கைடோவில் உள்ள சரபெட்சு எனும் சிறிய நகரத்திற்கு மேற்கே 18 கிலோமீட்டர் தொலைவில், 81 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்பு, ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானின் வடகிழக்கு கடலோரப் பகுதிகளில் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக அந்நாடு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter